அணு ஆயுதங்களை மேலும் மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் (KIM JONG UN) தெரிவித்துள்ளார். வடகொரிய ராணுவ தினத்தையொட்டி ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அதிபர், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையேயான முத்தரப்பு ராணுவ ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் பதற்றங்களை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். முன்னதாக ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து கையசைத்து உற்சாகப்படுத்தினார்.