உலக அழிவு படங்களில்.. வருவது போல கொடூர சம்பவம்.. கலிபோர்னியா சந்தித்த பேரழிவு

Update: 2025-01-12 02:41 GMT

கலிபோர்னியாவில் 4 நாட்களை கடந்து பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரலாறு காணாத காட்டுத்தீ பற்றி எரிந்து வர, தற்போது வரை 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பகுதிகள் கருகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல பகுதிகள் அனல் காற்று வீசி வருவதால் பல்லாயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காற்று மாசு மோசமடைந்து வருவதால், மக்களுக்கு அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்