காட்டுத்தீயில் Los Angeles… தீக்கிரையாகி அல்லாடும் நகரம் - அதிர்ச்சி காட்சிகள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ, கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களை ஆட்டுவித்துவருகிறது. காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்பு வீரர்களும், ராணுவ வீரர்களும் போராடி வரும் நிலையில், இதுவரை 22 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீ கபளீகரம் செய்துள்ளது. தற்போது கூடுதலாக ஆயிரம் ஏக்கர் பரப்பளவை தீக்கிரையாக்கி விட்டது.