ராணுவம் எப்படி ஆட்சியை கைப்பற்றும்? கண்முன்னே காட்டிய நிஜ சம்பவம் - உலகை அதிரவிட்ட வீடியோ

Update: 2024-06-27 10:50 GMT

அதிபர் மாளிகை மற்றும் நாடாளுமன்றம் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிளாசா முரில்லோ சதுக்கத்திற்குள் ராணுவம் கவச வாகனங்களுடன் அத்துமீறி நுழைந்தது... அதில் ஒரு கவச வாகனம் அதிபர் மாளிகையின் கதவை உடைக்க முயன்றது... ராணுவத் தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா அதிபர் மாளிகைக்குள் புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது... இதனிடையே பொலிவியாவின் முன்னாள் அதிபர் ஈவோ மொரேல்ஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் 2025 ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டால் அவரைக் கைது செய்வதாக ஜூனிகா தெரிவித்தார்... இந்த ராணுவ கிளர்ச்சியால் இச்சதித்திட்டத்திற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என பொலிவிய அதிபர் லூயிஸ் ஆர்ஸ் வலியுறுத்தினார்... இந்நிலையில், ஆட்சிக்கவிழ்ப்பு பற்றி அறிந்ததும், லூயிஸ் ஆர்ஸின் ஆதரவாளர்கள் பிளாசா முரில்லோ சதுக்கம் நோக்கி அணிவகுத்தனர். தொடர்ந்து ராணுவ வாகனங்கள் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறின... ராணுவத் தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா கைது செய்யப்பட்டார். புதிய ராணுவ தளபதி நியமிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்