அர்ஜெண்டினாவில் சிறிய விமானம் ஒன்று, குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உருகுவேவில் இருந்து தனியார் விமானம் ஒன்று, சான் ஃபெர்னாண்டோ நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது. திடீரென ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம், குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து பயங்கரமாக வெடித்தது. விமானம் தீ பிடித்து எரிந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். விமானத்தில் பயணிகள் யாரும் இல்லாத நிலையில், பைலட் மற்றும் கோ-பைலட் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தால், அந்த பகுதியில் இருந்த கார்கள், அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன..