' 1 ரூபா கூட அதிகம் ஆக கூடாது' - ஓலா, ஊபர் போன்ற டாக்ஸிகளுக்கு கடிவாளம்..

Update: 2024-02-05 10:22 GMT

வாடகை டாக்ஸிகள் மற்றும் ஆஃப் அடிப்படையில் இயங்கும் போன்ற டாக்ஸி சேவைகளுக்கான கட்டணத்தை கர்நாடக அரசு நிர்ணயித்துள்ளது... கர்நாடகாவில், வாகன வகைகளை பொறுத்து மூன்று வகையான கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில் 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள வாகனங்களின் சேவை கட்டணம் 4 கிலோ மீட்டருக்கு 100 ரூபாயாகவும், அதன் பிறகு கிலோ மீட்டருக்கு 24 ரூபாய் கூடுதலாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்களின் குறைந்தபட்ச சேவை கட்டணமானது 115 ரூபாயாகவும், பிறகு கிலோ மீட்டருக்கு 28 ரூபாய் வசூலிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல 15 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள வாகனங்களின் குறைந்தபட்ச சேவை கட்டணம் 130 ரூபாயாகவும், கூடுதல் கிலோ மீட்டர்களுக்கு 32 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், காத்திருப்புக் கட்டணம் 5 நிமிடங்களுக்கு பிறகு நிமிடத்திற்கு ஒரு ரூபாயாகவும், ஜி.எஸ்.டி. மற்றும் டோல் கட்டணமாக கூடுதலாக 5 சதவீத கட்டணமும், முன்பதிவு கட்டணமாக 10 சதவீதமும் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்