தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்குள் நுழைய முயன்ற வடமாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு தொடர்பாக பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் திண்டிவனம் புதுச்சேரி நெடுஞ்சாலையில் தலையில் கட்டுடன் வந்த நபர் ஒருவர் திடீரென ராமதாசின் இல்லம் முன்பாக நின்று வாகனங்களை மறித்தவாறு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார். பின்னர் அந்த நபர் ராமதாசின் இல்லத்திற்குள் செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் காவலர்கள் மதுபோதையில் இருந்தவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.