"உங்க கண்ணு முன்னாடி எல்லாத்தையும் அடிச்சு"குடிபோதையில் அட்டூழியம்.. | Pazhani
"உங்க கண்ணு முன்னாடி எல்லாத்தையும் அடிச்சு"குடிபோதையில் அட்டூழியம்.. | Pazhani
#viralvideo #police #thanthitv
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் உள்ள போலீஸ் பூத்துக்கு நேற்றிரவு 11 மணிக்கு வந்த பெண் ஒருவர் அங்கிருந்த நாற்காலி, மேசை உள்ளிட்ட பொருட்களை தூக்கி வெளியே வீசினார். தொடர்ந்து, அங்கிருந்த லத்தியை கையில் எடுத்த அந்த பெண் ஓரமாக படுத்து கிடந்த நாயை அடித்து விரட்டினர். சமாதானப்படுத்த முயன்றவர்களையும் லத்தியால் அடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போதை தலைக்கேறிய நிலையில், தண்ணீரையும் தலைமேல் ஊற்றிய அவர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் பயணிகள் அங்கு திரண்டனர். தகவலறிந்து வந்த போலீசார், அந்த பெண்ணின் கையில் இருந்த லத்தியை பறித்து சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் அவர் தொடர்ந்து தரையில் படுத்தவாறு அட்டகாசத்தில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.