மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (02-12-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline
- மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.....
- சாத்தனூர் அணையிலிருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்..
- கள்ளக்குறிச்சி அருகே மூங்கில்துறைப்பட்டு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்...
- சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீரால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..
- கிருஷ்ணகிரி அருகே ஊத்தங்கரையில் பரசன் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு பேருந்து நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்...
- சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் சோழன், பல்லவன், குருவாயூர், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 5 விரைவு ரயில்கள் ரத்து....
- மழை, வெள்ளம் காரணமாக விழுப்புரம் - சென்னை இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு...
- டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்ற திட்டம்...