கள்ளக்குறிச்சியில் அரசு பேருந்தில் ஆபத்தை உணராமல் அரசு பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பதைபதைக்க செய்திருக்கிறது. கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூர் மாவட்டம் கொளவாய் கிராமத்திற்கு செல்லும் 12 எச் அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் படிக்கும் அவர்கள் வீடு செல்வதற்கு போதிய பேருந்துகள் இல்லாததால், இதுபோல் ஆபத்தான பயணத்தை செய்வதாக சொல்லும் சமூக ஆர்வலர்கள் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுக்கிறார்கள்.