திருச்சியை உலுக்கிய சுள்ளான் கொலை..பஸ் படியில் தள்ளிவிட்டு காவு -வாயில் வயித்தில் அடித்து கதறும் ஊர்

Update: 2024-11-16 05:36 GMT

சினிமாவை மிஞ்சும் கொடூரமாக... அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் கீழே தள்ளி விடப்பட்டு, ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.. எங்கு இந்த சம்பவம்?.. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்த கொடியாலம் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர்தான் இந்த விஷ்ணு..

ஆட்டோ ஓட்டுநரின் மகனான இவர், கொடியாலத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது, இந்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது..

திண்டுக்கரை ரயில்வேகேட் அருகே பேருந்து சென்றபோது, ஹெல்மெட் அணிந்து கொண்டு இரண்டு பைக்குகளில் ஐந்து பேர் கொண்ட கும்பல் விஷ்ணுவை பின் தொடர்ந்து வந்திருக்கின்றனர்..

பேருந்தின் பின்பக்கம் படிகட்டு அருகே விஷ்ணு நின்று கொண்டிருந்த நிலையில், பேருந்துக்குள் ஏறிய ஒருவர், விஷ்ணுவின் காலை தட்டி விட்டு அவரை பேருந்துக்கு வெளியே தள்ளி விட்டிருக்கிறார்...

கீழே விழுந்து காயமடைந்த விஷ்ணு, உயிர் பயத்தில் ஓடிய நிலையில், அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றிருக்கின்றனர்..

விசாரணையில், கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் கொலை வழக்கு ஒன்றில் இருந்து விஷ்ணு ஜாமினில் வெளியே வந்திருப்பது தெரியவந்திருக்கிறது..

இந்நிலையில், இந்த கொலைக்கு இரு வெவ்வேறு காரணங்களை ஊர் மக்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

கடந்த 2023 இல் கொடியாலம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும், இதில்... கும்பாபிஷேகத்திற்கு பிளக்ஸ் வைப்பதில் இரு தரப்புக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது..

இதில், விஷ்னு மற்றும் 18 வயது சிறுவன் உட்பட எட்டு பேர் கொண்ட கும்பல், கொடியாலம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவரை கழுத்தறுத்து கொன்றுள்ளனர்...

இந்த வழக்கில் எட்டுபேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நிபந்தனை ஜாமினில் 7 பேருடன் சேர்ந்து விஷ்ணுவும் வெளியே வந்திருக்கிறார்..

தொடர்ந்து, திருச்சி நீதிமன்றத்தில் மாதம் மாதம் கையெழுத்திட்டு வந்த நிலையில், இந்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது...

மேலும், தன் உறவினர் பெண்ணுடன் பழகி வந்ததால் கோகுலை விஷ்ணு கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட விரக்தியாலும் கோகுலை தன் நண்பர்களுடன் சேர்ந்து விஷ்ணு கொன்றதாக கூறப்படுகிறது..

சரியாக ஒருவருடத்திற்கு முன் நடந்த இந்த கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் விஷ்ணு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், வழக்கை கையிலெடுத்திருக்கும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்