ஃபெஞ்சலின் உக்கிரத்தில் இருந்து இன்னும் மீளாத தி.மலை - பெரும் வேதனையில் விவசாயிகள்
ஃபெஞ்சலின் உக்கிரத்தில் இருந்து இன்னும் மீளாத தி.மலை - பெரும் வேதனையில் விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, மழை வெள்ள நீரில் மூழ்கி சுமார் 200 ஏக்கர் நெற்பயிர் அழுகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் துணைக் கால்வாய்களின் மூலம் 100க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேறி வருகிறது. அந்த வகையில் அனக்காவூர் ஏரியும் நிரம்பியுள்ளது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளால் உபரிநீர் கால்வாயில் தண்ணீர் செய்ய முடியாமல், கால்வாய் கரைகளை உடைத்துக்கொண்டு, நெல் நடவு செய்துள்ள வயல்களை தண்ணீர் மூழ்கடித்துள்ளது. இதனால் கால்வாயை தூர்வார வேண்டும் என்றும், வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு பாதிப்புகளை கணக்கிட்டு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.