"கேரளாவில் வந்து கழிவுகளை கொட்டுவோம்" - அண்ணாமலை கொடுத்த எச்சரிக்கை | Annamalai | Tweet

Update: 2024-12-17 08:47 GMT

கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களை, கேரள அரசின் குப்பைக் கிடங்காக மாற்ற, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், முழுக்க முழுக்க திமுக அரசுக்குத் தெரிந்தே குப்பைகள் கொட்டப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பொதுமக்களை திரட்டி, உயிரியல் மருத்துவக் கழிவுகள் லாரிகளில் ஏற்றிச் சென்று கேரளாவில் கொட்டப்படும் என்றும், அந்த லாரியில் தானும் ஏறிச்செல்ல போவதாகவும் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்