நெல்லையில் ஒரு மாதமாக நடக்கும் அவலம் - பார்த்தாலே அதிர்ச்சி தரும் காட்சிகள்

Update: 2024-12-17 08:55 GMT

நெல்லையில் ஒரு மாதமாக நடக்கும் அவலம் - பார்த்தாலே அதிர்ச்சி தரும் காட்சிகள்

நெல்லை அருகே கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கேரள மாநிலத்தின் புற்றுநோய் மருத்துவமனையில் இருந்து, மருத்துவ கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து நெல்லை அருகே கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. நாகர்கோவில் வழியாக வரும் மூட்டைகளை ராதாபுரம், பணகுடி, நாங்குநேரி பகுதிகளிலும், தென்காசி வழியே வரும் மூட்டைகளை கடையம், ஆலங்குளம், நடுக்கல்லூர் பகுதிகளிலும் கொட்டிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக முதலமைச்சரின் சிறப்புப் பிரிவு மற்றும் சுத்தமல்லி காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாகவும், தீ வைப்பதால் ஏற்படும் புகையால் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்