BREAKING || விடாமல் வெளுக்கும் கனமழை - அணை திறப்பு அறிவிப்பு...வெள்ள அபாய எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டம் வீடுர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பதால் அணையின் நலன் கருதி அணையில் இருந்து 5 மதகுகள் வழியாக 3150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநில கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணை அதன் முழு கொள்ளளவான 32 அடியை எட்டியிருந்த நிலையில் சங்கராபரணி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அணைக்கு 3,150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி 5 மதகுகள் வழியாக 3,150 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநில கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீடூர் அணையில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தண்ணீரில் நின்று வேடிக்கை பார்ப்பது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக தடுப்புகளை ஏற்படுத்தி பொதுமக்கள் செல்லாதவாறு தடுக்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.