திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல் - `70 அடி' பீதியில் மக்கள்

Update: 2024-12-12 13:24 GMT

தூத்துக்குடி மாவட்டம் உள்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருச்செந்தூரில் சுமார் 70 அடி உள்வாங்கி காணப்படும் கடல்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.

இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதைத்தவிர பௌர்ணமி தினங்களில் அதிகளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

திருச்செந்தூர் கடல் பகுதியில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் உள்வாங்குவது வழக்கம்.

இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி என மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாலை 4 மணி முதலே பரவலாக சாரல் மழை பெய்து வருகறது.

தற்போது திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் சுமார் 70 அடிக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

இந்த நிலையில் திருச்செந்தூர் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. அதன்மேல் நின்றபடி ஆபத்தை உணராமல் கடலை ரசித்து கொண்டிருக்கும் பக்தர்கள் அங்கு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்