வெளுத்து வாங்கி கனமழைதண்ணீருக்குள் தாலுக்கா ஆபீஸ் - மிதக்கும் பூந்தமல்லி

Update: 2024-12-12 13:04 GMT

பூந்தமல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில், காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, வட்டாட்சியர் அலுவலகத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் நிலை ஏற்பட்டது. இதேபோன்று, பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மான் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டிக் கொண்டு, உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பை மழை வெள்ளம் சூழ்ந்ததால், அவர்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக ம ழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்