இரண்டு நாள் ஆலோசனைக்கு பிறகு மாவட்ட செயலாளர் பட்டியலை, த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட செயலாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக சென்னை பனையூர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். ஒரு சில மாவட்டங்களில் அதிருப்தி தெரிவித்த அதிருப்தியாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிருப்தியாளர்களை சமாதானம் செய்து 100 மாவட்ட செயலாளர்கள் கொண்ட இறுதிப் பட்டியலை பொதுச்செயலாளர் ஆனந்த் இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.