வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே தனியார் கல்லூரி பேராசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மேல்பட்டி நாவிதம்பட்டியை சேர்ந்த டில்லி பாபு என்பவரின் மகள் அம்ரிஷா, வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக, கடந்த சில தினங்களாக வேதனையில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், அம்ரிஷாவின் சடலத்தை கைப்பற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.