வழி தவறி பீகாரில் இருந்து வேலூர் வந்த மூதாட்டி..காவலர்கள் செய்த நெகிழ்ச்சி செயல் | Velloor Police

Update: 2024-11-12 11:31 GMT

மறதி நோயால் வழிதவறி ரயில் மூலம் வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மூதாட்டியை, அவரது மகனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த கொண்டம்பல்லி கிராமம் அருகே கடந்த 9- ஆம் தேதி மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே சென்ற தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விசாரணையில் அவர் பீகார் மாநிலம்

பாகல்பூர் மாவட்டம் காஸிம்பூரை சேர்ந்த 74 வயதாகும் ரிஹானா காதுன் என்பதும், வழிதவறி ரயில் மூலம் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மூதாட்டியை, அவரது மகன் முகம்மத் ஆலமினிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்