ரூ. 10,076 கோடி... தமிழக அரசுக்கு குவிந்த வருவாய்..! | vehicles registration

Update: 2025-01-03 06:33 GMT

2024ஆம் ஆண்டில் வாகன பதிவு கட்டணம் மூலம் மட்டும், தமிழக அரசுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு சுமார் 2 கோடியே 61 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது. இந்த வாகனங்களுக்கான வாகனப்பதிவு கட்டணத்தின் மூலம் நாட்டிற்கு சுமார் 98 ஆயிரத்து 498 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் ஆகியவை அதிகபட்ச வருமானத்தை ஈட்டியுள்ளது. தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு சுமார் 19 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது. இவற்றுக்கான பதிவு கட்டணம், வாகன பதிவை புதுப்பித்தல் ஆகியவற்றின் மூலம் தமிழக அரசுக்கு பத்தாயிரத்து 76 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில் கிடைத்த வருவாயை விட 33 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்