35 வருஷம்... 3 தலைமுறையை கண்டும் கிடைக்காத அடிப்படை விஷயம் - கண்ணீரோடு அரசுக்கு வைக்கும் கோரிக்கை
சென்னை காவாங்கரையில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள், இந்திய குடியுரிமை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், இந்த முகாமில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்திய குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சரிடம் அவர்கள் முறையிட்டனர். குடியுரிமை இல்லாததால் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.