விக்னேஷ் உயிரிழப்பில் திடீர் திருப்பம்...மெடிக்கல் ரிப்போர்ட்டில் புது தகவல் -பரபரக்கும் ஹாஸ்பிட்டல்

Update: 2024-11-16 07:00 GMT

விக்னேஷ் உயிரிழப்பில் திடீர் திருப்பம்...

மெடிக்கல் ரிப்போர்ட்டில் புது தகவல்

உயிர் பிரியும் 2 நாட்களுக்கு முன்பே...

மீண்டும் பரபரக்கும் கிண்டி ஹாஸ்பிட்டல்

சென்னை கிண்டி மருத்துவமனையில், விக்னேஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது உறவினர்கள் முன்வைத்த பரபரப்பு குற்றச்சாட்டிற்கு, மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்திருக்கிறது.. இது குறித்து பார்க்கலாம்..

கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், வயிற்று வலி சிகிச்சைக்காக பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார்.

இந்த சூழலில் தான், விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவருகிறது.. இந்த நிலையில், போதிய மருத்துவர்கள் இல்லாததே.. விக்னேஷின் இறப்புக்கு காரணம் எனக் கூறி, அவரின் உறவினர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் சமரசம் செய்தும் அவர்கள் ஓயவில்லை.. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது..

தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்றபோது விக்னேஷிற்கு பித்தப்பையில் கல் இருப்பது தெரியவந்ததாகவும், கிண்டி அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கூட பணியில் இல்லை என உயிரிழந்த விக்னேஷின் சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார்..

அதேநேரத்தில், பித்தப்பையில் கல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் 2 நாட்களுக்கும் மேல் சிகிச்சை தொடர முடியாத நிலையிலேயே நோய் தீவிரத்துடன் அவர் அரசு மருத்துவமனை கொண்டுவரப்பட்டார். இங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது என்கிறது மருத்துவமனை தரப்பு...

விக்னேஷ் அனுமதிக்கப்பட்ட ஆரம்பத்தில் இருந்தே, உள்நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள் ஏராளமானோர் இருந்ததாகவும், இதனிடையே தான், விக்னேஷ் குடல்நோய் சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, திடீரென்று விக்னேஷுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐசியூ-விற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாச கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

முன்னதாக, இதே மருத்துவமனையில், தாயாருக்கு போதிய சிகிச்சை தரவில்லை என ஆத்திரமடைந்த மற்றொரு விக்னேஷ் என்பவர் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இப்படியொரு சம்பவம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த விக்னேஷ், கடுமையான குடிப்பழக்கத்தினால் கணையம் மற்றும் 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் செலுத்த இயலாத நிலையில், தான் கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்றும் அவருக்கு ஏற்கனவே, தைராய்டு சுரப்பி வியாதியும் இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவரது குடும்பத்தினரிடம் தெளிவாக விளக்கி ஒப்புதல் பெறப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்