கோவையில், தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை துடியலூர் பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் இல்லம், மார்ட்டின் குழும அலுவலகம் மற்றும் ஹோமியோபதி கல்லூரியில் சோதனை நடைபெறுகிறது. கடந்த வியாழக்கிழமை காலை சோதனையை தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், 3-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மார்ட்டின் உறவினர் இல்லங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர்.