"பணம் வாங்கி பொறுப்பு.. அண்ணன் ஒழிக..." - விஜய் கட்சிக்குள் வெடித்த மோதல்..
"பணம் வாங்கி பொறுப்பு.. அண்ணன் ஒழிக..." - விஜய் கட்சிக்குள் வெடித்த மோதல்..
வத்தலக்குண்டுவில், தமிழக வெற்றி கழக கொடியேற்று விழாவில், மாவட்ட தலைவரை கண்டித்து நிர்வாகிகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேருந்து நிலையம் முன்பு த.வெ.க. கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. விழா துவங்குவதற்கு முன்பு, அங்கு திரண்ட த.வெ.க நிர்வாகிகள், ஏற்கனவே தங்களுக்கு பொறுப்பு வழங்கிவிட்டு தற்போது புதியவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பொறுப்பை மாற்றி வழங்கி விட்டதாக கூறி, திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்டத் தலைவர் தேவாவுக்கு எதிராக ஒரு தரப்பினரும், ஆதரவாக ஒரு தரப்பினரும் மாறி மாறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.