லாரியில் தூங்கியவருக்கு காதில் பளார்.. வாங்கிய கேஸ்.. சமயபுரத்தை அதிரவிட்ட சம்பவம்

Update: 2024-11-12 09:14 GMT

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே லாரி ஓட்டுனரை போக்குவரத்து காவலர்கள் தாக்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் அன்பில் பகுதியில் உள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர், லாரி ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர், டால்மியாவில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது லாரியின் டயர் வெடித்துள்ளது. கூத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்தி விட்டு, லாரியிலேயே உறங்கி உள்ளார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள், அவரை விசாரித்து ஓட்டுநர் உரிமம், லாரியின் சாவி ஆகியவற்றை கேட்டுள்ளனர். மேலும், அவரிடம் இருந்து சாவியையும், ஆவணங்களையும் பறிமுதல் செய்து விட்டு, மது அருந்தி வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், போலீசார் தாக்கியதில் இடதுபுற காதில் வலி ஏற்பட்டு, மணிவண்ணன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், தன்னை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி ஓட்டுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்