இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை..! தண்ணீரில் மிதக்கும் 4 மாவட்டங்கள்.. | TN Rain
நெல்லை மாவட்டம் வள்ளியூர், பணகுடி, ராதாபுரம் வடக்கன்குளம், களக்காடு, நாங்குனேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் மிக கனமழை பெய்த நிலையில் பெரிய கடை வீதி உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது... பெரிய கடை வீதியில் வடிகால் வசதி இல்லாததால் குளம் போல் காட்சி அளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. குறிப்பாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு உள்ள சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர்... மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மழை நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..
சிதம்பரம் அருகே பெருங்காலூர் கிராமத்தில் வடிகால் வாய்க்காலை ஒப்பந்ததாரர் உரிய முறையில் அமைக்காததால் மழை நீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் புகுந்தது. அதிகாரிகள் ஒப்பந்ததாரரை அழைத்து பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.