அலங்கார ஊர்தி விவகாரத்தில், உண்மை வெளி வந்துவிட்டதே என்பதை பொறுத்துக் கொள்ளமுடியாத முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதனை வைத்து பதில் அளித்துள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சி காலத்தில் 2019, 20, 21 ஆம் ஆண்டு என, தொடர்ந்து மூன்று முறை குடியரசு தின விழாவில், அலங்கார ஊர்திகள் பங்கு பெற்றதாக கூறியுள்ளார்.
இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது முதல் குடியரசு தின கொண்டாட்டங்களில் தமிழக அரசு பங்குபெற்று வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறவில்லை என செய்தி வந்ததும், அதனை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விடுத்திருந்ததாக கூறியுள்ளார். உண்மை வெளி வந்துவிட்டதே என்பதை பொறுத்துக் கொள்ளமுடியாத முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல், அமைச்சர் சாமிநாதன் வைத்து, பதில் அளிக்க வைத்துள்ளதாக கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.