30 உருப்படிகளுடன் மாயமான நபர்.. என்ன தான் ஆனது? - ஓசுரில் ஒளிந்திருக்கும் மர்மம்

Update: 2024-12-18 08:53 GMT

30 உருப்படிகளுடன் மாயமான நபர்.. என்ன தான் ஆனது? - ஓசுரில் ஒளிந்திருக்கும் மர்மம்

ஓசூர் அருகே ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு சென்ற விவசாயி மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

தேன்கனிக்கோட்டை அடுத்த தாவரக்கரை கிராமத்தை சேர்ந்த முத்தப்பா தனது 30 ஆடுகளையும் நொகனூர் வனப்பகுதி அருகே மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்றுள்ளார்... ஆனால் வீடு திரும்பாத நிலையில் ஆடுகளுடன் அவர் எங்கே மாயமானார் என்பது தெரியாமல் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் உடனடியாக

வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். காணாமல் போன முத்தப்பாவையும் அவரது ஆடுகளையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அப்பகுதியில் மொபைல் கேமரா யூனிட் மட்டும் ட்ரோன் கேமரா உதவியுடன் தேடுதல் பணி நடக்கிறது...

நொகனூர், தாவரக்கரை மற்றும் ஜவளகிரி வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் சுற்றித்திரியும் நிலையில் முத்தப்பாவை காட்டு யானைகள் தாக்கியதா? அதனால் ஆடுகள் சிதறி ஓடினவா? அல்லது மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்து சென்றவர் எப்படி மாயமானார்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்