திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில், குடும்பத்துடன் தரிசனம் செய்த ஜப்பான் நாட்டவர்கள் கவனம் ஈர்த்தனர். குழந்தைகளுடன் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து வந்த 14 ஜப்பான் நாட்டவர்கள், பக்தர்களுடன் சேர்ந்து அரோகரா முழக்கமிட்ட படி, கோயில் வளாகத்தை சுற்றி வந்தனர். கோயிலில் உள்ள உற்சவர் சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், தெட்சிணாமூர்த்தி உள்பட தெய்வங்களை அவர்கள் தரிசனம் செய்தனர்.