காணாமல் போன கணவர்.. காட்டி கொடுத்த ரத்தக்கறை ..அதிர்ச்சி உறைந்த மனைவி

Update: 2024-11-10 03:02 GMT

அழகுமுத்துநகர் பகுதியை சேர்ந்த மகாராஜா என்பவர், வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பரை வீட்டுக்கு அழைத்து வந்து மது அருந்தியுள்ளார். முன் பின் தெரியாதவரை வீட்டுக்கு அழைத்துவந்து மது குடிப்பதா என சத்தம் போட்டுவிட்டு அவரது மனைவி வள்ளிநாயகி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். காலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் தனது கணவரை காணவில்லை என்று தாளமுத்து நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும், மகாராஜா சட்டையிலும் ரத்தக்கறை இருப்பதாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார். புகார் தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார் மோப்பநாயை வரவழைத்து ரத்தக்கறைகளை சோதனையிட்டனர். மகாராஜா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எங்கும் சென்றுவிட்டாரா? அவரோடு இருந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்