தஞ்சாவூர் முதல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி
வரையியில், 165 கிலோ மீட்டார் தூர சாலையை, நான்கு
வழிச் சாலையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலைகள்
ஆணையம் நடவடிக்கை எடுத்தது. 3 ஆயிரத்து 517 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மூன்று பிரிவுகளாக பணிகள்
நடைபெற்று வந்தன. 95 சதவிகித பணிகள் முடிவடைந்து,
டோல்கேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது
சோதனை அடிப்படையில் அந்த சாலை திறக்கப்பட்டுள்ளது. இதில் கார், லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. பொதுப் போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் சோதனை
அடிப்படையில் தற்போது வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையால் புதிய சாலையின் பக்கவாட்டு சுவர்கள் சரிந்தும், பல இடங்களில் சாலைகள் உள்வாங்கியும், விரிசல் விட்டும் காணப்படுகின்றன. சாலை தரமாக உள்ளதா என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.