திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மந்தக்கார தெருவில் தான், இந்த சோகம் அரங்கேறியுள்ளது.. இங்கு அசோக்குமார் - பரமேஸ்வரி தம்பதி வசித்து வந்தனர்..
இவர்களது ஒரே மகளான அருண நாதனி என்பவர் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இப்படி எளிமையாக, வாழ்ந்து கொண்டிருந்த குடும்பத்தில் தான், மனதை உடைக்கும் விதமாக, அமைந்திருந்தது... மருத்துவர்களின் ரிப்போர்ட்..
ஆம்.. அருண நாதனியின் தந்தைக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டது என்ற செய்திதான் அது.. மேலும், அவர் இன்னும் சிறிது காலம் தான் உயிரோடு இருப்பார்.. அவரைக் காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தது, குடும்பத்தில் நிம்மதியில் பேரிடியாய் விழுந்திருக்கிறது..
இதனால், மனமுடைந்து போயிருந்த குடும்பத்தினர்.. செய்வதறியாமல், தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு வந்திருக்கின்றனர்..
இதற்காக, எலி மருந்தை வாங்கி வீட்டில் உணவில் கலந்து தந்தை அசோக்குமார், தாயார் பரமேஸ்வரி, மகள் அருண நாதனி என 3 பேரும் சாப்பிட்டுள்ளனர்..
இந்த சூழலில் தான், அருண நாதனிக்கு பலமுறை போன் செய்தும் எடுக்காததால், சந்தேகத்தில் வீட்டில் வந்து பார்த்த அவரது தோழி அதிர்ச்சியடைந்தார்..
பின்னர் அவர் வீட்டில், தற்கொலைக்கு முயன்ற 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.. அருண நாதனி வீட்டிலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடி நிலையில், அருண நாதனியின் தந்தையும், தாயும் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இதனிடையே, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அருண நாதனியின் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்..
மேலும் அவரது மனைவி, இதே மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். 1
தந்தைக்கு நேர்ந்த துயரத்தால், குடும்பமே எடுத்த இந்த விபரீத முடிவில், 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..