`சட்டவிரோத மது'... தட்டிக்கேட்டவருக்கு கொலைவெறி கும்பலால் நேர்ந்த விபரீதம்... ஷாக்கில் கீழக்கரை
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சட்டவிரோத மது விற்பனை குறித்து தட்டிக்கேட்ட சமூக ஆர்வலரை, மது விற்பனையாளர்கள் அடியாட்களை கொண்டு தாக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கீழக்கரையில் இருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் அகற்றப்பட்ட நிலையில், அங்கு சட்டவிரோத மது விற்பனை அதிகரித்தது. இதுகுறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்த சமூக ஆர்வலர் பிரபாகரன், போலீசாரிடம் புகாரளித்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், பிரபாகரனை மது விற்பனையாளர்கள் அடியாட்களை கொண்டு தாக்கியதாக கூறப்படும் நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.