வாரச்சந்தையில் வெடித்த பூகம்பம்... விசாரணையில் வெளியான நூதன மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் வாங்கிச்சென்ற 8 ஆடுகள் பலியானதால், வியாபாரியுடன் விவசாயிகள் தகராறில் ஈடுபட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போச்சம்பள்ளி சந்தையில் பனந்தூரை சேர்ந்த விவசாயிகள் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு 20 ஆடுகள் வாங்கியதாகவும், அவற்றில் 8 ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் சரியான பதிலளிக்காத நிலையில், எடையை கூடுதலாக காண்பிக்க ஆட்டிற்கு மண் மற்றும் தண்ணீரை கலந்து கொடுத்ததால் அவை உயிரிழந்ததாக கூறி விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்