20 வருட கனவு நிறைவேறியது - மகிழ்ச்சியில் பூரிக்கும் கிராம மக்கள்

Update: 2024-11-17 10:11 GMT

சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்பட்ட அரசுப்பேருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்... அரசு பேருந்து இன்றி மாணவர்கள், தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில், 20 வருடங்களாக மக்கள் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்... அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அந்த கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது... கிராம மக்கள் ஓட்டுநர் நடத்துநருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்...

Tags:    

மேலும் செய்திகள்