குழந்தைக்கு உணவு ஊட்டும் பெற்றோர்களே உஷார்..! - சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே இறந்த 2 வயது குழந்தை
தென்கோவனூரைச் சேர்ந்த பக்கிரிசாமி - ரேகா தம்பதியின் 2 வயது குழந்தை மகாலட்சுமிக்கு, தாய் ரேகா உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, குழந்தையை வாசலில் விட்டுவிட்டு, வீட்டிற்குள் சென்ற ரேகா, உணவு எடுத்து வந்த பார்த்த போது, குழந்தை மாயமாகியிருந்தது. அதிர்ச்சியடைந்த ரேகா, தேடிப்பார்த்த போது, வீட்டிற்கு எதிரே உள்ள வாய்க்காலில் குழந்தை மிதந்துள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.