கை கழுவும் போது காத்திருந்த எமன்... இப்படியும் ஒரு சாவு வருமா..? கனவிலும் நினைக்கா கொடூரம்

Update: 2024-12-27 12:34 GMT

பெட்ரோல் பங்க்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வேன் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காசிபாளையத்தை சேர்ந்த ராம்கி என்பவர், தனது வேனில் வாழைத்தாரை ஏற்றிக் கொண்டு, அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பி உள்ளார். அந்த வேனை வேறு ஓட்டுநர் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டு, அங்கிருந்த குடிநீர் குழாயில் கை கழுவி உள்ளார். அப்போது குழாய் அருகே உள்ள கம்பி வேலியில் அவரது கை பட்டதும், அங்குள்ள மின் விளக்கிற்காக கொடுக்கப்பட்ட மின்சார வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு, கம்பி வேலி முழுவதும் பரவி, அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், தூக்கி வீசப்பட்ட ராம்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்