டெல்டாவில் திடீர் சாலை மறியலில் குதித்த மக்கள் - தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு
தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அருகே, பூண்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியை, சாலியமங்கலம் பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூண்டி கிராம மக்கள், தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி இணைப்பின் காரணமாக, 100 நாள் வேலை பறிபோய்விடும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.