மாமியார் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய மருமகள் - போலீசை பார்த்ததும் அம்பியாக மாறி கதறல்

Update: 2024-12-12 07:56 GMT

மகனைக் கண்டித்ததால் ஆத்திரமடைந்த தாய் மாமியார் மீது வெந்நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் ஓகைப் பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா சாரதா தம்பதி. இளையராஜா கூலி வேலை செய்து வரும் நிலையில் அவரது தாய் அங்காளம்மை மகனுடன் சேர்ந்து வசித்து வருகிறார்.இந்த நிலையில் சாரதாவின் மகனை அங்காளம்மை கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாரதா கொதிக்கும் வெந்நீரை எடுத்து அங்காளம்மை மீது ஊற்றி இருக்கிறார். இதனால் அலறி துடித்த அங்காளம்மை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சாரதாவைக் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்