மாலை மாயமான விவசாயி... காலையில் மிதந்த உடல்... ஊரையே அதிர்ச்சியில் தள்ளிய சம்பவம்

Update: 2024-12-12 10:20 GMT

மரக்காணம் அடுத்த காணி மேடு பகுதியை சேர்ந்த விவசாயி, பாலமுருகன். இவரது விவசாய நிலம் ஊருக்கு வெளியே உள்ளது. நேற்று மாலை தனது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு ஓங்கூர் தரைப்பாலம் வழியாக, பாலமுருகன் வீடு திரும்ப முயற்சித்தார். அந்த சமயத்தில் தரைப்பாலத்தை மூழகடித்தவாறு ஆற்றில் வெள்ளம் சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை இந்த வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட பாலமுருகன் மாயமானார். இன்று அதிகாலை அவரது உடல் காணிமேடு அருகே கரை ஒதுங்கியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்