வெளுத்து வாங்கும் கனமழை..! வெள்ளத்தில் எட்டி பார்க்கும் ஜீவராசிகள்.. கடும் அச்சத்தில் வந்தவாசி மக்கள்
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் மற்றும் ஆரணி ரோடு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர், பொட்டி நாயுடு தெரு மற்றும் கே.வி.டி நகர் பகுதிகளில் தேங்குகிறது. இந்த நீருடன் கழிவுநீரும் சேர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சில நேரங்களில், தேங்கிய மழைநீரில் பாம்புகளும் ஊர்ந்து செல்கின்றன. ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும், இப்பகுதி மக்கள் இத்தகையை சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.