#BREAKING || தமிழ்நாட்டில் கேஸ் தட்டுப்பாடு அபாயம் - "நாளை முதல்.." வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

Update: 2025-03-26 07:55 GMT

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசிற்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு சமையல் எரிவாயுக்களை LPG டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் லாரி உரிமையாளர்கள் 5514 எல்.பி.ஜி டேங்கர் லாரிகளை இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் 2025 - 2030 ஆம் ஆண்டுக்கான வாடகை ஒப்பந்த அடிப்படையில் எல்பிஜி டேங்கர் லாரிகளை இயக்க கோரிய புதிய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள லாரி உரிமையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், அதேப் போல இந்த புதிய ஒப்பந்தத்தில் 3879 லாரிகள் மட்டுமே கேட்டுள்ளதால் வாய்ப்பு கிடைக்காத பல லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே புதிய டேங்கர் லாரிகளை அனுமதிக்கக் கூடாது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள், எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் சங்க நிர்வாகிகள் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்