மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம பேய் தந்தை - ஆயுள் முழுவதும் மறக்கவே முடியாத தண்டனை
திருத்தணி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான தந்தை முருகனுக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது. கடந்த 2 ஆயிரத்து 20ஆம் ஆண்டு பொதட்டூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த திருவள்ளுர் மகளிர் நீதிமன்றம், இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளி முருகனுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தீர்ப்பை தொடர்ந்து, குற்றவாளி முருகனை காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.