கடன் தொல்லை - திமுக கிளைச் செயலாளர் தற்கொலை

x

கடன் தொல்லையால் திமுக கிளைச் செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காட்டுச் சிவிவிரி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், திமுக கிளைச் செயலாளராக இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கிய நிலையில், பணத்தை திருப்பி கொடுக்காததால் அந்த நபர், பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கமலக்கண்ணன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவருக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெள்ளிமேடு பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்