``வீடியோ எடுத்து டார்ச்சர்.. மாணவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை..'' - திருப்பூரில் அதிர்ச்சி

Update: 2025-02-10 15:49 GMT

திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் சுந்தர வடிவேல் என்பவர் மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, பள்ளியில் போலீசார் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். மாணவர்களை ஆசிரியர் வீடியோ எடுத்ததாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்