திருமணமான பெண் மேல் கொண்ட மோகம்.. கல்யாணத்திற்கு ஒற்றை காலில் நின்ற இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-05-03 11:19 GMT

ஏற்கனவே திருமணமான பெண்ணை, தனக்கு திருமணம் செய்து வைக்க மறுத்ததால்... தாத்தாவை பேரன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்து உள்ள முத்தூரை சேர்ந்தவர் அருண்குமார். தாத்தா முனியப்பனின் அரவணைப்பில் வளர்ந்து வந்த இவர், போதை பழக்கத்திற்கு அடிமையானதாகவும், திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பெண்ணையே தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறிய அருண்குமார் தாத்தாவிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தாத்தாவை கம்பால் அடித்ததால் அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்