காட்டு யானையிடம் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள் - பரபரப்பு வீடியோ
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திடீரென சாலையை கடந்த காட்டு யானையால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். உடுமலை-மூனாறு சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிகள் வரும்போது எதிர்பாராத விதமாக சாலையை காட்டுயானை ஒன்று கடந்து சென்றது. அப்போது வாகன ஓட்டிகள் காட்டுயானையிடம் நொடி பொழுதில் உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதே போல் சாலையில் சென்றுகொண்டிருந்த 2 காட்டு யானைகள் திடீரென ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்சி வாகன ஓட்டிகளை கதிகலங்க செய்தது.