சென்னை மக்களே ரெடியா... வெளிநாட்டில் பார்த்தது இப்ப நம்ம ஊரில் - மிஸ் பண்ணிடாதீங்க 3 நாள்தான் டைம்!

Update: 2025-01-10 12:20 GMT

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் விடும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இந்த பலூன் திருவிழா நடத்தப்பட்டு வரும் சூழலில் . இன்று முதல் முறையாக மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை கடற்கரை அருகில் திறுவிடந்தை பகுதியில் துவங்கப்பட்டது. இன்று விடபடும் ராட்சச பலூன்கள் அதிகபட்சம் 50 அடி தூரம் வரை பறக்கும் கூடியதாகும் இந்த பலூன்கள் பறப்பதற்கு ஆட்டோ எல்பிஜி கேஸ் பயன்படுத்தப்படுகிறது

இதனை தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு துவங்கி வைத்து சிறிது தூரம் மேலே பலூனில் பறந்தது அனைவரையும் வியப்படைய செய்தது

இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் தனியார் அமைப்பு இணைந்து நடத்தும் பலூன் விடும் திருவிழாவானது இன்று முதல் (10,11,12ஆகிய) தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்று வரும் இந்நிகழ்வில் இதில் சுற்றுலாத்துறை அதிகாரிகள்

மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

அமைச்சர்களை வருகை ஒட்டி பள்ளி மாணவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த கொடிகளை கையில் ஏந்தி அணிவகுப்பு மரியாதை சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.

பலூன் திருவிழாவை காண வரும் பொது மக்களுக்கு நுழைவு கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்க படுகிறது பள்ளி மாணவர்கள் மற்றும் 12 வயது சிறியவர்களுக்கு இலவசம் எனவும் கட்டணம் நிர்ணிக்கப்பட்டுள்ளது.

மேலும் 50 அடி உயரம் வரை பறக்கும் பலூன் திருஜிழானை கான வருபவர்களுக்கு அதனை பார்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் கட்டணம் பெரும் கொப்பங்களுக்கு குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை பலூன் மீதி பறக்க அனுமதி வழங்கபடாட்டு வருகிறது.

ஒரு லொனில் 3 அல்லது 4பேர் மட்டும் பறக்க அனுமதி வழங்க பட உள்ளது.

மற்றவர்கள் அனைவரும் பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பலூன் மீது பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அறிவிப்பு.

இதில் பிரான்ஸ், ஆஸ்திரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த ஏர் பலூன் பைலட்டுகள் கலந்துகொண்டு பல்வேறு வடிவங்கள் மற்றும் தனித்துவமான வண்ணங்களில் பலூன்களை பரக்கவிடப்பட்டுள்ளனர்.

இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஹாட் ஏர் பலூன் பைலட்டுகள் தமிழகம் வந்துள்ளனர்.

மேலும் இதில் வெப்ப காற்று பலூன்கள், சிறப்பு வடிவிலான பலூன்கள் பேபி மான்ஸ்டர், எலி தி எலி மாஸ்டர், ஹ்யூகோ தி பீட்டா உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலும், தனித்துவமான வண்ணங்களிலும் பலூன்கள் பரகவிடபட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தனியாருடன் இணைந்து பலூன் திருவிழா நடத்தி வருகிறது.

மினி பலூங்களான சூடான காற்று அடைக்கப்பட்ட பலூன்கள் பரக்கவிடபட்டன

இதே போன்ற பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14 முதல் 16-ந் தேதி 3 நாட்கள் வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த சர்வதேச பலூன் திருவிழா விழா நடைபெற்று முதல் முறையாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்