திருச்செந்தூரில் நிகழ்ந்த அதிசயம்.. நேரில் பார்த்து உடல் சிலிர்த்த பக்தர்கள்
திருச்செந்தூரில் நிகழ்ந்த அதிசயம்.. நேரில் பார்த்து உடல் சிலிர்த்த பக்தர்கள் - "சத்தியமா நம்பவே முடியல.. எப்படி இது சாத்தியம்?"
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருநாள் அன்று கொளுத்தப்பட்ட சொக்கப்பனை மூன்று நாட்களாக எரிந்ததால், முருகனின் அருள் என பக்தர்கள் பரவசமடைந்தனர். கோவில் முன்புள்ள கடற்கரையில் 25 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வழக்கமாக சொக்கப்பனை மறுநாள் காலை வரை எரிவது வழக்கம். ஆனால் திருச்செந்தூர் கோவில் முன்பு கடற்கரையில் கொளுத்தப்பட்ட இந்த சொக்கப்பனை மூன்று தினங்களாக எரிந்தது. அவ்வப்போது மழை பெய்து வந்த போதிலும் சொக்கப்பனை நனையாமல் முழுமையாக எரிந்துள்ள அதிசயம், கோயிலுக்கு வரும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.